ஒரே நாளில் 110 பேருக்கு கொரோனா.! எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை பேர்.!?

கொரோனா தொற்று நாடு முழுவதும் தற்போது அதிகரித்து வருகிறது. அதிலும் தமிழ்நாட்டிலும்

By manikandan | Published: Apr 01, 2020 06:43 PM

கொரோனா தொற்று நாடு முழுவதும் தற்போது அதிகரித்து வருகிறது. அதிலும் தமிழ்நாட்டிலும் தினம் தினம் கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இன்று ஒரு நாளில் மட்டும் 110 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரி பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இதன் மூலம் தமிழ்நாட்டில் 234 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 

இன்று உறுதியான 110 பேரும்  டெல்லியில் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதில், திருநெல்வேலியில் 2 பேருக்கும், கோவையில் 28 பேருக்கும், ஈரோட்டில் 2 பேருக்கும், தேனியில் 20 பேருக்கும், திண்டுக்கல்லில் 17 பேருக்கும், மதுரையில் 9 பேருக்கும், திருப்பத்தூரில் 7 பேருக்கும், செங்கல்பட்டில் 7 பேருக்கும், சிவகங்கையில் 5 பேருக்கும், தூத்துக்குடியில் 2 பேருக்கும், திருவாரூரில் 2 பேருக்கும், கரூர். சென்னை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டத்தில் தலா ஒருவருக்கும், காணிச்சிபுரத்தில் 2 பேருக்கும். கொரோனா தொற்று இன்று உறுதியாகியுள்ளது. 

Step2: Place in ads Display sections

unicc