2021-க்கு முன்பு கொரோனா தடுப்பு மருந்து கிடைக்காது – உலக சுகாதார நிறுவனம்

2021-க்கு முன்பு கொரோனா தடுப்பு மருந்து கிடைக்காது.

முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் தனது தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை இந்த கொரோனா வைரஸால், உலகளவில், 15,374,394 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 630,211 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

இந்நிலையில், இதுகுறித்து உலக சுகாதார நிறுவனத்தின் செயல் இயக்குனர், மைக் ரயான் அவர்கள் கூறுகையில், கொரோனா தடுப்பு மருந்தை 2021-ம் ஆண்டுக்கு முன் எதிர்பார்க்க முடியாது என்றும், பல்வேறு நாடுகளில் தடுப்பு மருந்து சோதனை முழுவீச்சில் நடைபெறுவதாகவும், பல தடுப்பு மருந்துகள் 3-ம் கட்ட பரிசோதனையில் வெற்றி பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், பொருளாதாரத்தை சார்ந்து இல்லாமல், தேவையை பொறுத்து தடுப்பூசி விநியோகத்தை உறுதிசெய்ய செயல்பட்டு வருவதாகவும், தடுப்பூசி கிடைக்கும் வரையில் நோய்தொற்று பரவாமல் கட்டுப்படுத்துவது மிகவும் அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.