100 லட்சத்தை நெருங்கும் கொரோனா!90 லட்சத்தை கடந்தது!

உலகளவில் கொரோனா பாதிப்பு 90 லட்சத்தை தாண்டி உள்ளது.

கடந்த டிசம்பர் மாதத்தில்  சீனாவில் பரவத் தொடங்கிய இந்த வைரஸ் உலகளவில் பரவத் தொடங்கியது.அவ்வாறு கோரத்தாண்டவம் ஆடி வரும் கொரோனாவால்  உலகளவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 91,85,974ஆக உயர்ந்துள்ளது; அதே போல வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 49,21,380ஆக உயர்ந்துள்ளது; வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,74,257ஆக உயர்ந்துள்ளது.

வைரஸ் அதிகம் பரவிய நாடுகள்  பட்டியல்:

அமெரிக்கா – 23,88,001

பிரேசில் – 11,11,348

ரஷியா – 5,92,280

இந்தியா – 4,25,282

இங்கிலாந்து – 3,04,331

ஸ்பெயின் – 2,93,584

பெரு – 2,57,447

சிலி – 2,46,963

இத்தாலி – 2,38,720

ஈரான் – 2,07,525

author avatar
kavitha