கொரோனா அச்சுறுத்தல் : அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வந்த 'ஸ்பேல்லீங் பி' போட்டி ரத்து!

கொரோனா அச்சுறுத்தல் : அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வந்த 'ஸ்பேல்லீங் பி' போட்டி ரத்து!

கொரோனா அச்சுறுத்தலால், அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வந்த ‘ஸ்பேல்லீங் பி’ போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.

முதலில் சீனாவில் பறவையா கொரோனா வைரஸ் தொற்றானது, தொடர்ந்து பல நாடுகளை தாக்கி வருகிறது. தற்போது இந்த வைரஸ் நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையிலும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையிலும் முதலிடத்தில் இருப்பது அமெரிக்கா தான்.

இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அமெரிக்காவில், ஆங்கில வார்த்தைகளை எழுத்துக்கூட்டி சரியாக உச்சரிக்கும் ‘ஸ்பெல்லிங் பீ’ என்ற போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்த போட்டியில், 1-8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் கலந்து கொள்கின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் இந்த போட்டியில் உலக நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான சிறுவர், சிறுமிகள் பங்கேற்கும் இந்த போட்டியில், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த போட்டிகளில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாணவர்களே தொடர்ந்து வாகை சூடி வந்தனர்.

இந்த ஆண்டுக்கான ‘ஸ்பெல்லிங் பீ’ போட்டி அடுத்த மாதம் (மே) நடைபெற இருந்த நிலையில், அமெரிக்காவில் கொரோனா வைரசின் தாக்கம் தீவிரமாக இருப்பதால் இந்த ஆண்டு ‘ஸ்பெல்லிங் பீ’ போட்டியை ரத்து செய்வதாக போட்டியை நடத்தி வரும் அமைப்பு  தெரிவித்துள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube