ஒரே நாளில் 900-க்கும் மேலானவர்களை கொன்ற கொரோனா! இங்கிலாந்து, பிரான்சில் கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்பு!

இங்கிலாந்து மற்றும் பிரான்சில் ஒரேநாளில் 900-க்கும் மேற்பட்டோரின் உயிரை காவு வாங்கிய கொரோனா வைரஸ். 

சீனாவை தொடர்ந்து, பல நாடுகளில் மிக தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனால், உலகம் முழுவதும், ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 596 பேர்  இந்த நோயினால்  பலியாகியுள்ளனர். 

இந்நிலையில், பிரான்ஸ் நாட்டில் தற்போதைய நிலவரப்படி ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 869 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், நேற்று ஒரே நாளில் மட்டும் வைரஸ் தாக்குதலுக்கு அங்கு 987 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 13 ஆயிரத்து 197 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், இங்கிலாந்து நாட்டிலும் கொரோனா தீவிரமடைந்து வருகிறது. அந்நாட்டில் 73 ஆயிரத்து 758 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. மேலும், வைரசுக்கு நேற்று ஒரே நாளில் மட்டும் 980 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 8 ஆயிரத்து 958 ஆக உயர்ந்துள்ளது. 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.