அடுத்த 90 நாட்களுக்குள் அனைத்து குடும்பங்களுக்கும் கொரோனா பரிசோதனை – ஆந்திரா முதல்வர்

அடுத்த 90 நாட்களுக்குள் அனைத்து குடும்பங்களுக்கும் கொரோனா பரிசோதனை.

இந்தியா முழுவதும் கொரோன வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், அதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதுவரை இந்தியாவில் கொரோனா வைரஸால், 4,37,426 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 13,975 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அவர்கள், அடுத்த 90 நாட்களுக்குள் அனைத்து குடும்பங்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும், மேலும் நோய்தொற்று ஏற்பட்டவர்களை களங்கப்படுத்தும் விதத்தில் நடந்துகொள்ளக் கூடாது என தெரிவித்துள்ளார். இதுவரை ஆந்திராவில், 7,858 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 119 பேர் உயிரிழந்துள்ளனர் எனபது குறிப்பிடத்தக்கது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.