#corona : இலங்கை நாடாளுமன்ற தேர்தல் ஒத்திவைப்பு!

கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா பாதிப்பு உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த பாதிப்பு முதலில் சீனாவில் ஏற்பட்ட நிலையில், இதனை தொடர்ந்து இதன் பாதிப்பு மற்ற நாடுகளிலும் பரவி வருகிறது. 

இந்நிலையில், கொரோனா பாதிப்பால் அனைத்து நாடுகளிலும், மக்கள் கூடுகிற இடங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இதனையடுத்து, இலங்கையில் 50-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டு அரசும் இந்த நோயை கட்டுப்படுத்த தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 

தற்போது கொரோனா தாக்கத்தால் தேர்தல் பணிகள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தலை ஒத்தி வைக்குமாறு அரசியல் கட்சிகள் தெரிவித்திருந்தன. இதனையடுத்து, இலங்கையில், ஏப்ரல் 25-ம் தேதி நடைபெறவிருந்த நாடாளுமன்ற தேர்தல் நடைபெறாது என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.