புதுச்சேரியில் மூதாட்டிக்கு கொரோனா உறுதி.!

புதுச்சேரி மாநிலத்தை சார்ந்த மூதாட்டி ஒருவர் அபுதாபியிலிருந்து கேரளாவின்

By murugan | Published: Mar 17, 2020 08:56 PM

புதுச்சேரி மாநிலத்தை சார்ந்த மூதாட்டி ஒருவர் அபுதாபியிலிருந்து கேரளாவின் கோழிக்கோடு விமான நிலையம் மூலம்  மஹே வந்துள்ளார்.அப்போது அந்த மூதாட்டிக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருந்துள்ளது.

இதையெடுத்து அவரை மஹேவில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.பின்னர் அந்த மூதாட்டியின் ரத்த பரிசோதனையை கோழிக்கோட்டிற்க்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அங்கு மூதாட்டியின் ரத்த பரிசோதனை செய்ததில் கொரோனா  இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்ட மூதாட்டியை மஹேவில் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளார்.

இந்தியாவில் கொடூரன் கொரோனா வைரசால் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 137 ஆக அதிகரித்துள்ளது. இதனை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Step2: Place in ads Display sections

unicc