50 லிருந்து 51 லட்சமாக உயர்ந்த கொரோனா பாதிப்பு.!

உலகளவில் கொரோனா வைரசால் பாதித்தோரின் எண்ணிக்கை 51,01,476 ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 329,903 ஆகவும் உயர்ந்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இதனால் உலக நாடுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. உலகளவில் கொரோனா பாதிப்பு காலை நிலவரப்படி 50,85,666 பேர் பாதிக்கப்பட்டு, 3,29,736 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,021,673 ஆக இருந்தது. தற்போது, கொரோனா பாதிப்பு 50 லட்சத்திலிருந்து 51 லட்சமாக அதிஹகரித்துள்ளது. 

தற்போதைய நிலவரப்படி, உலகளவில் கொரோனா வைரசால் பாதித்தோரின் எண்ணிக்கை 51,01,476 ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 329,903 ஆகவும் உயர்ந்துள்ளது. இதுவரை வைரஸில் இருந்து 20,33,672 பேர் மீண்டுள்ளனர். மேலும், மருத்துவமனையில் 27,37,901 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில், 45,795 பேரின் நிலைமை மோசமாக உள்ளது. நேற்று ஒரே நாளில் உலகம் முழுவதும் புதிதாக 99,724 பேர்  பாதிக்கப்பட்டுள்ளதுடன், 4740 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்