சார்ஸை மிஞ்சிய கொரோனா.! 811 பேர் உயிரிழப்பு.! 37,000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு.! தவிக்கும் சீனா.!

சார்ஸை மிஞ்சிய கொரோனா.! 811 பேர் உயிரிழப்பு.! 37,000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு.! தவிக்கும் சீனா.!

  • china |
  • Edited by Bala |
  • 2020-02-09 11:31:20
  • சீனாவில் கொரோனா வைரசால் உயிரிழப்பின் எண்ணிக்கை 811-ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கடந்த 2002-2003-ம் ஆண்டு சார்ஸ் வைரஸ் தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்புகளை விட கொரோனா மிஞ்சியிருக்கிறது.
சீனாவை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பல நகரங்ககளில் பரவியுள்ளது. இதன் தாக்குதல் சுமார் 20 நாடுகளுக்கு மேல் பரவி உள்ளது. இதனால் உலக நாடுகள் முழுவதும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தப் புதியவகை வைரஸ், முதலில் வுஹான் நகரில் உயிரிழந்த 61 வயது முதியவரின் இறப்புக்கு காரணம் எனக் கடந்த ஜனவரி 10-ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு காரணமாக அங்கிருந்த சந்தைப் பகுதியில், விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு இந்த வைரஸ் பரவியிருக்கலாம் என்று கருதப்பட்டதால், விலங்குகள் ஏற்றுமதி, இறக்குமதிக்கு சீனா தடை விதித்தது. இந்நிலையில், இந்த வைரசால் சீனாவில் நாளுக்கு நாள் இறப்புகள் அதிரிகரித்துக்கொண்டே வருகிறது. அந்த வகையில், நேற்று (சனிக்கிழமை) வரை உயிரிழப்பின் எண்ணிக்கை 811-ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் இந்த வைரசால் 37,198 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரபூர்வமாக தகவல்கள் வெளியிட்டது. இதில் 2,656 பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 24 மணி நேரத்தில் 89 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தகவல் வந்துள்ளது. இந்த வைரஸ் பாதிப்பை முதலில் கண்டறிந்த மருத்துவரும் லீ இதனால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம், அரசு மீது சீன மக்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்கள். சார்ஸை மிஞ்சிய கொரோனா.! 811 பேர் உயிரிழப்பு.! 37,000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு.! தவிக்கும் சீனா.! மேலும் வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த சீனா 12க்கும் மேற்பட்ட நகரங்களுக்குச் செல்லவும், அங்கிருக்கும் மக்கள் வெளியேறவும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இதனிடையே கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 811-ஆக உயர்ந்திருக்கும் நிலையில், கடந்த 2002-2003-ம் ஆண்டு சார்ஸ் வைரஸ் தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்புகளை விட கொரோனா மிஞ்சியிருக்கிறது. இந்த சார்ஸ் வைரஸ் பாதிப்பால் அப்போது உலக அளவில் 774 பேர் உயிரிழந்தனர் என குறிப்பிடத்தக்கது.

Latest Posts

#IPL2020: ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்த பஞ்சாப்..!
டிசம்பர் 1 ஆம் தேதி முதல் முதலாம் ஆண்டு பொறியியல் வகுப்புகள் தொடக்கம்!
#IPL2020: சதம் விளாசிய தவான்.. 165 ரன்கள் இலக்கு நிர்ணயித்த டெல்லி..!
ஆன்டிபாடிகள் குறைந்தால் குணமடைந்த நோயாளியை கொரோனா தாக்கும் - ஐ.சி.எம்.ஆர்
ஒரு நிமிடத்திற்குள் கொரோனாவை கண்டறியும் பரிசோதனை கருவி.!
தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மேலும் 50 பேர் உயிரிழப்பு!
#IPL2020: டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் பேட்டிங் தேர்வு..!
நகைச்சுவை நடிகர் கவுண்டமணி திரைப்படத்தில் நடிக்காததற்கு காரணம் என்ன தெரியுமா.?
அமெரிக்காவை விட இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் குறைவாக உள்ளது - பிரதமர் மோடி!
விஜய் சேதுபதியின் மகளுக்கு மிரட்டல் -காவல்துறை வழக்குப்பதிவு