அமெரிக்காவில் உச்சத்தை தொட்ட கொரோனா பாதிப்பு..! 6 பேர் கொண்ட குழுவை நியமித்த ட்ரம்ப்.!

கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார இழப்பை சரிக்கட்ட 6 பேர் கொண்ட குழுவை நியமித்த அதிபர் ட்ரம்ப். 

உலக முழுவதும் சுமார் 200 நாடுகளில் பரவி இருக்கும் கொரோனா வைரசால் அமெரிக்காவில் உயிரிழப்பும், பாதிப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தொற்று பதிப்பில் உச்சத்தை தொற்று அதனை கடந்துவிட்டதாக அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கொரோனா வைரசால் அதிகம் பாதிப்பு மற்றும் உயிரிழப்புகளை சந்தித்து இருக்கும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அந்நாட்டில் 24 மணிநேரத்தில் 20 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் புதிதாக தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனா வைரசுக்கு ஒரே நாளில் சுமார் 2,600 பேர் உயிரிழந்ததை அடுத்து, அங்கு கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28,559 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றின் மையமாக இருக்கும் அமெரிக்காவின் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,44,417 ஆக உயர்ந்துள்ளது. அந்நாட்டில் நியூயார்க் மாகாணம் தான் மிக அதிக பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறது. அங்கு மட்டும் 11,586 பேர் உயிரிழந்திருக்கும் நிலையில், கொரோனா வைரசால் சுமார் 2 லட்சத்துக்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள கலிபோனியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் அடுத்த ஆண்டு வரை இசை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு போட்டிகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள மாகாணங்களுக்கு தேவையான நிதியை அதிபர் ட்ரம்ப் முறையாக வழங்கவில்லை என ஆளுநர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதனிடையில் அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடியையே மீட்க ஊரடங்கை தளர்த்துவதை குறித்து ட்ரம்ப் அறிவிக்கவுள்ளார். கொரோனாவுக்கு எதிராக போராடி வருவதற்கு பலன் கிடைத்திருப்பதாக கூறியுள்ள ட்ரம்ப், போர் தொடர்ந்து வருவதாகவும், கொரோனா பாதிப்பில் உச்சத்தை தொட்டு அதனை கடந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார இழப்பை மீட்டெடுக்க 6 பேர் கொண்ட குழு ஒன்றை அமைத்துள்ளார்.

அதில் இந்திய வம்சாவளியினர் சுந்தர் பிச்சை, சத்யா நாதெல்லா, ஐபிஎம் நிறுவனத்தின் அரவிந்த் கிருஷ்ணா, மைக்காரன் நிறுவனத்தை சேர்ந்த சஞ்சய் மெஹ்ரோத்ரா, ஆப்பிள் நிறுவனத்தின் டிம் குக், ஆரக்கல் நிறுவனத்தின் லாரி எலிசன், பேஸ்புக்கின் மார்க் ஜுக்கர்பெர்க் ஆகியோர் இணைத்துள்ளனர். இதுதவிர வேளாண், வாங்கி, கட்டுமானம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறையில் நிபுணர்களையம் அதிபர் ட்ரம்ப் நியமித்துள்ளார். துறைசார்ந்த நிபுணர்கள் மிகவும் புத்திசாலிகள் என்றும் இவர்கள் தனக்கு புதிய யோசனையை வழங்குவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்