இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது.! பலி 53 ஆக உயர்ந்தது.!

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் சுமார் 190 நாடுகளில் பரவியுள்ளது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகளை திணறி வருகிறது. இந்த வைரஸ் பரவாமல் இருக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனைத்து நாடுகளும் எடுத்து வருகிறது. உலகளவில் கொரோனா வைரசால் பாதித்தவர்களின் எண்ணிக்கை தற்போதைய நிலவரப்படி 9,64,603 ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 49,240 ஆகவும் உள்ளது. இருப்பினும், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 203,274 பேர் குணமடைந்துள்ளனர் என உலக சுகாதாரத்துறை அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் இந்தியாவில் தீவிரமடைந்து வருகிறது. நாளுக்கு நாள் பாதிப்பும், பலியானோர் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போதைய நிலவரப்படி 1965 லிருந்து 2069 ஆக உயர்ந்துள்ளது. பலியானவர்களின் எண்ணிக்கை 50 லிருந்து 53 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா வைரஸிலிருந்து 156 பேர் குணடமடைந்து உள்ளார்கள் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்