இரண்டாவது முறையாக இங்கிலாந்தை தாக்கும் கொரோனா - எச்சரிக்கும் போரிஸ் ஜான்சன்!

இரண்டாவது முறையாக இங்கிலாந்தை தாக்கும் கொரோனா - எச்சரிக்கும் போரிஸ் ஜான்சன்!

இரண்டாவது முறையாக இங்கிலாந்தை கொரோனா அலை தாக்கினால், தவிர்க்க முடியாது என பிரதமர் போரிஸ் ஜான்சன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதிலும் கொரானா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் தீவிரமடைந்து கொண்டே செல்கிறது. மூன்று கோடிக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 9 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இந்த கொரானா வைரஸை கட்டுப்படுத்த உலகம் முழுவதிலும் பல்வேறு நாடுகள் தடுப்பூசி மருந்துகளை போட்டிபோட்டு கண்டுபிடித்துக் கொண்டு உள்ளன. இந்நிலையில் இங்கிலாந்தில் மூன்று லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 41 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், தற்போது இங்கிலாந்தில் கொரோனாவின் தாக்கம் தற்பொழுது அதிகரித்து வருகிறது. இங்கிலாந்தில் ஏற்பட்டுள்ள இந்த கொரோனா அலை தவிர்க்க முடியாதது எனவும், புதிய கட்டுப்பாடுகளுக்கு சாத்தியம் இருப்பதாகவும் இங்கிலாந்து நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் அவர்கள் எச்சரிக்கை கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், கொரோனா  மீண்டும் அதிகரித்து வருவதால் இங்கிலாந்தில் தற்பொழுது மீண்டும் கட்டுப்பாடுகள் மற்றும் சமூக விலகலலுக்கான அவசியம் ஏற்பட்டுள்ளது. எனவே ஊரடங்குகள் போடப்படலாம் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும் கொரோனாவின் தாக்கம் இங்கிலாந்தில் அதிகரித்திருப்பதால் பொது இடங்களில் ஆறு பேருக்கு மேல் கூட கூடாது எனவும், பொது நிகழ்வுகள் விளையாட்டு நிகழ்வுகள் ஆகியவற்றுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்பதாகவும் இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது.

Latest Posts

மகாராஷ்டிரா துணை முதல்வருக்கு கொரோனா..!
#BREAKING : 50% இட ஒதுக்கீடு வழங்க முடியாது - உச்சநீதிமன்றம்  தீர்ப்பு
பென் ஸ்டோக்ஸ் சதத்தின் மூலம் புள்ளி பட்டியலில் 6 வது இடத்திற்கு சென்ற RR..!
உலகின் பல சாதனைகளையும் தகர்த்தெறிந்த SSC Tuatara.. இதுதான் புதிய அதிவேக கார்!
ரிசர்வ் வங்கி கவர்னருக்கு கொரோனா தொற்று உறுதி!
ரூ.2.50 கோடி நகை கொள்ளையில் ஒருவர் கைது..!
அவர்கள் அடித்த சிக்ஸர்களை நான் ரசித்தேன்- ஹர்திக் பாண்டியா..!
முடிந்தால் எங்கள் கட்சியை கவிழ்த்து பார்க்கட்டும்! பாஜக-வுக்கு சவால் விடுக்கும் உத்தவ் தாக்கரே!
அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை தொடர்ந்து பின்னடைவு..?
அமைச்சர் துரைக்கண்ணு உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைகிறேன் - மு.க.ஸ்டாலின்