மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் 15 பேருக்கு கொரோனா உறுதி.!

டெல்லியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் 15 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தலைநகர் டெல்லியில் பணிபுரிந்து வந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் ஒரு உதவி சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் நான்கு தலைமை கான்ஸ்டபிள்கள் உள்ளிட்ட 15 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட போலீஸ் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றன. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதால் பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் நிறைவடைய இருந்த ஊரடங்கு மே 3 ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய காரணங்களை தீவிர மக்கள் வீடுகளிலேயே முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தொடர்ந்து பணிபுரிந்து வரும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன் மும்பை கடற்படை தளத்தில் பணிபுரிந்து வந்த வீரர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு, அவர்கள் தொடர்பில் இருந்த அனைவரும் அந்தந்த இடங்களிலேயே தனிமைப்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடப்படுகிறது. இதனிடையே இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை 26,496 ஆகவும், உயிரிழப்பின் எண்ணிக்கை 824 ஆகவும் உயர்ந்துள்ளது. இதையடுத்து கொரோனா சிகிச்சை பெற்று வந்தவர்களில் 5,804 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்