டெல்லியில் மேலும் 1,192 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

டெல்லியில் கொரோனா வைரஸ் காரணமாக இன்று ஒரே நாளில் 1,192 பேர் பாதிப்பு.

டெல்லியில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸின் தாக்கம் குறைந்து கொண்டே வருகின்றது. அந்த வகையில், இன்று ஒரே நாளில் 1,192 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,50,652 ஆக அதிகரித்தது.

அதுமட்டுமின்றி, டெல்லியில் ஒரே நாளில் 790 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், அங்கு குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,35,108 ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஒரே நாளில் 11 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,178 ஆக அதிகரித்துள்ளது.

டெல்லியில் 11,366 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாக டெல்லி சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.