கொரோனா விழிப்புணர்வு! நடிகர் கமல் வெளியிட்டுள்ள வீடியோ!

கடந்த சில மாதங்களாக உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் நோயானது, முதலில் சீனாவில் பரவி, பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கிய நிலையில், தற்போது மற்ற நாடுகளிலும் பரவி வருகிறது. இதுகுறித்து, பல நாடுகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இதுகுறித்து பலரும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிற நிலையில், பிரபல நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமலஹாசன் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அந்த வீடியோவில், நடிகர் கமலஹசன் பேசுகையில், கொரோனா வைரஸ் பாதிப்பு என்பது, நான்காவது, ஐந்தாவது வாரத்தில் பன்மடங்கு அதிகம் ஆவதை பல நாடுகளில் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதனால் வைரஸ் தொற்று அறிகுறிகள் வெளியே தெரியாத போது பாதிக்கப்பட்ட சிலர், பல இடங்களுக்குப் போய் இருப்பர்.

 பாதிக்கப்பட்டது 5 பேர் என்றால், அதிலிருந்து 25 பேருக்கு பரவும். அது இன்னும் நூறு பேருக்கு பரவாமல் தடுப்பதற்கு ஒரே வழிதான் இருக்கிறது. சமூகத்திடம் இருந்து விலகி இருப்பது தான் நல்ல வழியாகும். அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும், வீட்டை விட்டு வெளியே வாருங்கள். நான் வெளியே வந்திருப்பது, இந்த அறிக்கையை உங்களுக்கு சொல்வதற்காக தான் என்று தெரிவித்துள்ளார்.

 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.