ஏபிவிபி அமைப்பை சார்ந்தவர்களை மறைக்க போலீசார் முயற்சி – காங்கிரஸ் புகார்.!

ஏபிவிபி அமைப்பை சார்ந்தவர்களை மறைக்க போலீசார் முயற்சி – காங்கிரஸ் புகார்.!

  • தாக்குதலை நடத்தியது ஏபிவிபி அமைப்பை சார்ந்தவர்கள் என்பதை மறைக்க டெல்லி போலீசார் மறைக்க முயற்சி செய்வதாகவும் காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
  • இந்த தாக்குதலை நடத்தியதாக ஒன்பது பேரின் பெயர்களை டெல்லி போலீசார் வெளியிட்டுள்ளனர்.அதில் ஆயிஷி கோஷ் பெயர் இடம் பெற்று உள்ளது .

கடந்த ஐந்தாம் தேதி ஜே.என் யூ பல்கலைக்கழகத்தில் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலில் மாணவர்கள் சங்க தலைவி ஆயிஷி கோஷ்  படுகாயமடைந்தார். மேலும் 20 மாணவர்கள் காயமடைந்தனர். இந்த தாக்குதலை நடத்தியதாக ஒன்பது பேரின் பெயர்களை டெல்லி போலீசார் வெளியிட்டுள்ளனர்.

அதில் மாணவர்கள் சங்க தலைவி ஆயிஷி கோஷ் பெயர் இடம் பெற்றதால் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் போலீசார் வெளியிட்டுள்ள இந்த இந்த அறிக்கைக்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலை நடத்தியது ஏபிவிபி அமைப்பை சார்ந்தவர்கள் என்பதை மறைக்க டெல்லி போலீசார் மறைக்க முயற்சி செய்வதாகவும் காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.

இந்த தாக்குதலை சதித்திட்டம் தீட்டியது ஏபிவிபி மாணவர் அமைப்பினர் என ஒரு தனியார் தொலைக்காட்சி ஓன்று அம்பலப்படுத்தியுள்ளது. அந்த தொலைக்காட்சி  ஏபிவிபி அமைப்பை சேர்ந்த ஒரு மாணவனிடம்  ரகசியமாக நடத்திய பேட்டி  ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்தப் பேட்டியில் அந்த மாணவன் கூறியது, அந்த தாக்குதல் நடந்தபோது வளாகத்தில் இருந்த மின் விளக்குகளை அணைத்ததை அவர் ஒப்புக்கொண்டார். மேலும் இந்த தாக்குதலை தாங்களே  நடத்தியதாகவும் கூறியுள்ளார்.ஜே.என் யூ பல்கலைக்கழகத்தில்  நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இந்து ரக்‌ஷா தளம் என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan
Join our channel google news Youtube