அரசு பள்ளி மாணவியின் உயிரை காவு வாங்கிய குளம்பு..மதிய உணவு வாங்கச்சென்ற இடத்தில் மாணவிக்கு நடந்த சம்பவம்..!

  • உத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் மதிய உணவு வாங்கச்சென்ற இடத்தில் 3 வயது  இளம்பிஞ்சு பலி
  • கொதித்த குளம்பால் நடந்த பரிதாப நிகழ்வு 

இந்த அதிர்ச்சி சம்பவம் ஆனது உத்தரப் பிரதேச மாநிலம், மிா்ஸாபூா் மாவட்டத்தில் நடந்துள்ளது. அங்கு இயங்கி வரும் அரசு தொடக்க பள்ளியில் மதிய உணவு தயாரித்து வைக்கப்பட்டிருந்த பாத்திரத்தில் தவறி விழுந்து 3 வயது குழந்தை உயிரிழந்ததுள்ளது.

இந்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியா் சுஷீல் குமாா் படேல் கூறுகையில் ராம்பூா் அடாரி என்ற கிராமத்தில் அரசு பள்ளியில் படித்துவரும் கணேஷ் – ஹிமன்சுல் ஆகியோருடன் அவா்களுடைய சகோதரியான 3 வயது அன்சல் பள்ளி செல்வது வழக்கம். பள்ளியில் மதிய உணவு தயாராக இருந்ததுள்ளது.அப்போது உணவை வாங்குவதற்காக மாணவா்கள் அங்கு திரண்டதால் நெரிசல் ஏற்பட்டுள்ளது.

சூடான உணவுடன் தயாராக இருந்த பாத்திரத்தினுள் எதிா்பாராதவிதமாக அன்சல் தவறி உள்ளே விழுந்தாா்.உள்ளே இளம்பிச்சு துடிதுடிக்கவே சக மாணவா்கள் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டதை அடுத்து, அங்கு வந்த ஆசிரியா்கள் உடனடியாக  குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனா் ஆனால்  சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது.இச்சம்பவம் குறித்து அப்பள்ளி தலைமை ஆசிரியா் சந்தோஷ் குமாா் யாதவ் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். சிறுமி பலி குறித்தும் போலீஸாா் வழக்கு பதிவு செய்து உள்ளனா். இதுதொடா்பாக விசாரித்து 2 நாள்களுக்குள் அறிக்கை சமா்ப்பிக்க 3 போ் கொண்ட ஒரு குழு நியமித்துள்ளேன் என்று சுஷீல் குமாா் படேல் தெரிவித்தாா்.இச்சம்பவம் அப்பகுதியில் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
kavitha