குக்கர் சின்னம் யாருக்கு?? டிடிவி தினகரன் கருத்து

  • வருகின்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் விரைவில் அறிவிக்கப்படும்.
  • பாதிக்கப்பட்டவர்களுக்காக போராடும் மாணவர்களை கைது செய்ய யாருக்கும் அதிகாரம் இல்லை.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் சென்னையில் கேகே நகரில் உள்ள கழகத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இரண்டாம் ஆண்டு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இப்போது வருகின்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் விரைவில் அறிவிக்கப்படும். மேலும் மார்ச் 26ம் தேதி குக்கர் சின்னம் யாருக்கு வரும் என்பதை மக்கள் அறிவார்கள் எனவும் கூறினார்.

பொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு விரைவில் தண்டனை விதிக்க வேண்டும் என்று கூறிவிட்டு இதனை எக் காரணம் கொண்டும் அரசியலாக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டார்.

பாதிக்கப்பட்டவர்களுக்காக போராடும் மாணவர்களை கைது செய்ய யாருக்கும் அதிகாரம் இல்லை. அதையும் மீறி காவல்துறையினர் கைது செய்தால் அதை பார்த்துக்கொண்டு அமமுக அமைதி காக்காது என தெரிவித்தார்.