சர்காரில் சர்ச்சைக்குரிய காட்சிகள்…!சர்ச்சை காட்சிகளை நீக்க எடிட்செய்யும் பணி காலை தொடக்கம் …!

சர்காரில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெறாது என்று தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர் சங்க இணைச்செயலாளர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

தளபதி விஜய் மற்றும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் 3வதாக உருவான திரைப்படம் சர்கார். இப்படத்திற்க்கு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பு இருந்தது.படத்திற்கு எதிர்பார்த்தது போலவே முதல் நாள் நல்ல வசூல் செய்தது.

ஆனால் படத்தில் அரசை விமர்சித்து பல காட்சிகள், வசனங்கள் இடம் பெற்றது. அதிலும் குறிப்பாக அதிமுக ஆட்சியில் கொடுத்த இலவச மிக்ஸியை இயக்குனர் முருகதாஸ் தீயில் எரிவது போல காட்சி இடம்பெறும் இது அதிமுககாரர்களை மிகுந்த கோபத்தை உண்டாக்கியது. ஆதலால்  அவர்கள் சர்கார் ஓடும் திரையரங்கில் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த காட்சிகள் தொடர்பாக தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர் சங்க இணைச்செயலாளர் ஸ்ரீதர் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,  சர்கார் படத்தில் சர்ச்சை காட்சிகளை நீக்க எடிட்செய்யும் பணி காலை 10:30 மணியளவில் தொடங்குகிறது. மதியம் அல்லது மாலையில் திரையிடப்படும் காட்சிகளில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெறாது என்று  தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர் சங்க இணைச்செயலாளர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment