அதிமுக வேட்பாளர் வெற்றிக்கு எதிராக தொடர்ந்த வழக்கு : தீர்ப்பை ஒத்திவைத்த நீதிமன்றம்

  • சென்னை உயர்நீதிமன்றத்தில் தொல்.திருமாவளவன் வழக்கு தொடர்ந்தார்.
  • இந்த வழக்கின் தீர்ப்பினை  தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.

கடந்த 2016-ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது.இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் இந்த தேர்தலில் திருமாவளவன் அ.தி.மு.க., வேட்பாளர் முருகுமாறனிடம் தோல்வி அடைந்தார்.

எனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் தொல்.திருமாவளவன் வழக்கு தொடர்ந்தார் .அந்த வழக்கில்,அதிமுக வேட்பாளர் முருகுமாறனின் வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றுதெரிவித்தார்.இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் காட்டுமன்னார்கோயில் தொகுதியில் நிராகரிக்கப்பட்ட 102 தபால் வாக்குகளுடன் தற்போதைய மாவட்ட தேர்தல் அதிகாரி தேதி ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இதனை தொடர்ந்து தேர்தல் அதிகாரி ஆஜராகி சிலவற்றில் ஓட்டுச் சீட்டு இல்லை என்று தெரிவித்தார்.இதனை தொடர்ந்து நீதிமன்றம் வழக்கினை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக அறிவித்தது.