உள்ளாட்சித் தேர்தலில் போட்டியா? கமல்ஹாசன் ஆலோசனை

உள்ளாட்சித் தேர்தல் குறித்து  கமல் ஹாசன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார் என்று

By venu | Published: Nov 20, 2019 11:25 AM

உள்ளாட்சித் தேர்தல் குறித்து  கமல் ஹாசன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தல் சுமார் 3 வருடங்களுக்கு மேலாக தமிழகத்தில்  நடைபெறாமல் உள்ளது.தற்போது வருகின்ற டிசம்பர் மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது என்று தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது.இதனால் கட்சிகள் அனைத்தும்  உள்ளாட்சித் தேர்தலுக்கான  பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியும் தற்போது இதற்கான வேலைகளை செய்யத் தொடங்கியுள்ளது.இதன் ஒருபடியாக சென்னை ஆழ்வார் பேட்டையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கட்சி நிர்வாகிகளுடன் உள்ளாட்சித்  தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Step2: Place in ads Display sections

unicc