புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் காங்கிரஸ் வெற்றி..!

புதுச்சேரியில் உள்ள காமராஜர் நகர் தொகுதியில் கடந்த 21-ம் தேதி இடைத்தேர்தல்

By murugan | Published: Oct 24, 2019 09:16 AM

புதுச்சேரியில் உள்ள காமராஜர் நகர் தொகுதியில் கடந்த 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தொகுதியில் உள்ள 35 ஆயிரத்து 9 வாக்காளர்களில் 24 ஆயிரத்து 296 பேர் வாக்களித்தனர். இதனால் 69.44 சதவீத வாக்கு பதிவானது. இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு புதுச்சேரி காமராஜர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டது. இந்த வாக்கு எண்ணிக்கை மூன்று சுற்றுகளாக எண்ணப்பட்டன. மூன்று சுற்றுகள் எண்ணப்பட்ட நிலையில்  இறுதியாக காங்கிரஸ் வேட்பாளர் ஜான் குமார் 14,782வாக்குகளும் , என் ஆர் காங்கிரஸ் வேட்பாளர் புவனேஸ்வரன் 7,611 வாக்குகளும் மற்றும் நாம் தமிழர் கட்சி  வேட்பாளர் பிரவீனா 620 வாக்குகள் பெற்றனர். இதனால் என் ஆர் காங்கிரஸ் வேட்பாளர் புவனேஸ்வரனை விட  காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் 7171 வாக்குகள் முன்னிலை பெற்று வெற்றி பெற்றார்.
Step2: Place in ads Display sections

unicc