காங்கிரஸ் தொண்டர்கள் சமூக வலைதளங்களில் மட்டும் தீவிரமாக இயங்கினால் போதாது-சோனியா காந்தி

காங்கிரஸ் தொண்டர்கள் சமூக வலைதளங்களில் மட்டும் தீவிரமாக இயங்கினால் போதாது என்று சோனியா காந்தி  தெரிவித்துள்ளார். டெல்லியில் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் சோனியா காந்தி ஆலோசனையில் ஈடுபட்டார்.ந்த கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், கே.சி.வேணுகோபால், ஏ.கே.அந்தோனி, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்பொழுது அவர் பேசுகையில்,  வருவாய் பற்றாக்குறை குறித்து கவனம் செலுத்தாமல் அரசு பழிவாங்கும் அரசியலில் ஈடுபட்டு மக்களை திசைதிருப்பி வருகிறது.நாட்டின் பொருளாதாரம் அபாயகரமான நிலையில் உள்ளது.காங்கிரஸ் தொண்டர்கள் சமூக வலைதளங்களில் மட்டும் தீவிரமாக இயங்கினால் போதாது என்று தெரிவித்துள்ளார்.