குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு -காங்கிரஸ் கட்சியினர் தர்ணா

குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்று

By venu | Published: Dec 22, 2019 09:47 AM

  • குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்று வருகிறது. 
  • நாளை காங்கிரஸ் தர்ணா போராட்டம் நடத்துகிறது.
பாகிஸ்தான்,வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத அடிப்படையிலான துன்புறுத்தல்களால் வெளியேறி,இந்தியாவில் தஞ்சமைடைந்த முஸ்லிம்கள் அல்லாத பிற சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் மத்தியில் உள்ள பாஜக அரசு குடியுரிமை திருத்த மசோதாவை கொண்டுவந்தது.குடியுரிமை சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவை என இரு அவைகளிலும்  தாக்கல் செய்யப்பட்டது .கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இரு அவைகளிலும் நடைபெற்ற வாக்கெடுப்பில் மசோதாவிற்கு ஆதரவாக அதிக வாக்குகள் கிடைத்தது.இதனால் இரு அவைகளிலும் மசோதா நிறைவேறியது.இதனை தொடர்ந்து சட்டம் அமலுக்கு வந்தது.இந்த சட்டத்திற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது.இதன் விளைவாக பல இடங்களில் போராட்டங்கள் வெடித்து வருகிறது. வங்கதேசத்தில்  இருந்து அசாம் மாநிலத்தில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை கண்டறியும் வகையில் தேசிய குடிமக்கள் பதிவேடு  தயாரிக்கப்பட்டது. இதன் இறுதி வரைவு பட்டியலும் கடந்த  சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது. இந்நிலையில்குடியுரிமை திருத்தச்சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு எதிராக  டெல்லி ராஜ்காட்டில்  நாளை  ( டிசம்பர் 23) மதியம் 3 மணி முதல் இரவு 8 மணி வரை காங்கிரஸ் கட்சியினர் தர்ணா போராட்டம் நடத்துகிறது .குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடைபெறும் தர்ணாவில் சோனியா காந்தி, ராகுல் காந்தி  உள்பட கட்சியின் முக்கிய தலைவர்கள் பங்கேற்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .
Step2: Place in ads Display sections

unicc