புதுச்சேரியில் காங்கிரஸ் பிரமுகர் வெடிகுண்டு வீசி கொலை

புதுச்சேரியில் காங்கிரஸ் பிரமுகர் வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டுள்ளார்.

By venu | Published: Jan 31, 2020 10:27 AM

புதுச்சேரியில் காங்கிரஸ் பிரமுகர் வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டுள்ளார்.
புதுச்சேரியில் உள்ள  பிள்ளையார்குப்பம் பகுதியை சேர்ந்த காங்கிரஸ்  கட்சியின் முன்னாள் கவுன்சிலர் சாம்பசிவம் ஆவார்.இவர் இன்று காலை திருமண அழைப்பிதழ் கொடுக்க காரில் சென்றதாக கூறப்படுகிறது.அப்பொழுது, கிருமாம்பாக்கம் அரசு பள்ளி அருகே காரில் சென்றபோது அவரது கார் மீது மர்ம நபர்கள் வெடிகுண்டு வீசியுள்ளனர்.கார் எரிந்த நிலையில் சாம்பசிவம் காரிலிருந்து இறங்கினார்.இதன் பின்னர் அவரை மர்ம நபர்கள் ஓடஓட  விரட்டி வெட்டினார்கள்.பின்னர் அந்த நபர்கள் தப்பியோடிவிட்டார்கள். இதில் அவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
சாம்பசிவம் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Step2: Place in ads Display sections

unicc