ஷூட்டிங்கிற்கே வராமல் பல கோடி ருபாய் நஷ்டம் ஏற்படுத்திய சிம்பு! - கே.இ.ஞானவேல் ராஜா பரபரப்பு புகார்!

தமிழ் சினிமாவில் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் நடிகர் சிம்பு.  இவர் அவ்வப்போது

By Fahad | Published: Mar 30 2020 03:48 PM

தமிழ் சினிமாவில் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் நடிகர் சிம்பு.  இவர் அவ்வப்போது படப்பிடிப்புக்கு வருவதில்லை என புகார்கள் வருவது புதிதல்ல. இவர் தற்போது கன்னடத்தில் ஹிட் ஆன முஃப்டி படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வந்தார். அந்த படத்தை கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்து வருகிறார். இப்படத்தில் சிம்புவுடன் கெளதம் கார்த்திக்கும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது தயாரிப்பாளர் சங்கத்தில் புதிய புகார் ஒன்று வந்துள்ளது. அதாவது, சிம்பு தற்போது படப்பிடிப்பிற்கு ஒழுங்காக வரவில்லை எனவும், இதனால் பல கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், தயாரிப்பாளர் கே.இ.ஞானவேல் ராஜா சிம்பு மீது புகார் அளித்துள்ளார். அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதற்கு முன்னரும் இதே போல ஒரு புகாருக்காக, சிம்புவுக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.