நியூஸிலாந்து எதிரான போட்டி .! 22 பவுண்டரி , 2 சிக்ஸர் மைதானத்தின் நாலாபுறமும் பந்தை பறக்கவிட்ட பிருத்வி ஷா.!

  • நியூசிலாந்திற்கு எதிராக இந்திய “ஏ” அணி தற்போது பயிற்சி போட்டி நடைபெற்று வருகிறது.
  • இந்திய அணியின் தொடக்க வீரராக இறங்கிய பிரித்வி ஷா 100 பந்தில் 150 ரன்கள் குவித்து உள்ளார். அதில் 22 பவுண்டரி , 2 சிக்ஸர் அடங்கும்.

இந்திய அணியில் உள்ள பிரித்வி ஷா டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு களமிறங்கிய  அறிமுகப்போட்டியிலே துவக்க வீரராக இறங்கி சதமடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக அந்த தொடரில் இருந்து விலகினார்.

பின்னர் தொடர்ந்து ஏற்பட்ட காயம் காரணமாகவும் சில தொடர்களிலும்  பிரித்வி ஷா விளையாட வில்லை.இதை தொடர்ந்து விளையாடிய சையது முஷ்டாக் அலி தொடரில் ஊக்கமருந்து சோதனையில் சிக்கி சில மாதம் விளையாட தடைவிதைக்கப்பட்டது.

இந்நிலையில் தடைக்கு பிறகு ரஞ்சி கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடியதால் நியூசிலாந்திற்கு எதிராக இந்திய “ஏ” அணியில் இடம்பெற்றார். தற்போது நடைபெற்று வரும் ரஞ்சி கோப்பை தொடரில் கர்நாடகாவுக்கு எதிரான போட்டியின் பீல்டிங்கின் போது  பிரித்வி ஷாவிற்கு  இடது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது.

இதனால் பிரித்வி ஷா பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சை மற்றும் பயிற்சி முறைகளை மேற்கொண்டு வந்தார்.அதனால் நியூசிலாந்திற்கு எதிரான தொடரில் கலந்து கொள்ளமாட்டார் என எதிர்பார்த்த நிலையில் ,  2 போட்டிகள் கொண்ட பயிற்சி போட்டியில் முதல் போட்டியில் பிரித்வி ஷா இடம்பெறவில்லை .

இந்நிலையில் இன்று நடைபெற்றுவரும் இரண்டாவது பயிற்சி போட்டியில் பிரித்வி ஷா இடம் பெற்றார்.இந்த போட்டியில் முதலில் இறங்கிய இந்திய அணி 49.2 ஓவரில் அனைத்து விக்கெடடையும் இழந்து 372 ரன்கள் எடுத்தனர்.அதில் இந்திய அணியின் தொடக்க வீரராக இறங்கிய பிரித்வி ஷா 100 பந்தில் 150 ரன்கள் குவித்து உள்ளார். அதில் 22 பவுண்டரி , 2 சிக்ஸர் அடங்கும்.

இதை தொடர்ந்து நியூசிலாந்து அணி 37 ஓவர் முடிவில் 3 விக்கெட்டை இழந்து 249 ரன்கள் அடித்து விளையாடி வருகின்றனர்.

author avatar
murugan