பட்ஜெட் குறித்து கருத்து தெரிவிக்கலாம் – பிரதமர் நரேந்திர மோடி

  • நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளா்ச்சி 5 சதவீதமாகக் குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • பட்ஜெட் குறித்து மக்கள் கருத்து தெரிவிக்கலாம்  என்று பிரதமர் நரேந்திர  மோடி தெரிவித்துள்ளார்.

2020 – 2021-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி மாதம் தாக்கல் செய்ய உள்ளார்.இதற்கு இடையில் நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளா்ச்சி 5 %  குறையும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில்  பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து மக்களிடம் கருத்துக் கேட்டுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

இது தொடர்பாக அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்ட பதிவில், பட்ஜெட் என்பது, 130 கோடி இந்திய மக்களின் விருப்பமாகவும், இந்தியாவை அதன் முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதற்கான வழியாகவும் அமைந்துள்ளது.இதனால்  பட்ஜெட் குறித்து உங்களது யோசனை மற்றும் திட்டங்களை பகிர்ந்து கொள்ளலாம் என்று  பதிவிட்டுள்ளார்.