நடிகர் சிம்புவுடன் இணையும் தளபதி விஜயின் தந்தை!

  • நடிகர் சிம்புவுடன் இணையும் தளபதி விஜயின் தந்தை. 
  • முஸ்லீம்

By Fahad | Published: Apr 01 2020 04:03 AM

  • நடிகர் சிம்புவுடன் இணையும் தளபதி விஜயின் தந்தை. 
  • முஸ்லீம் கதாபாத்திரத்தில் நடிக்கும் சிம்பு. 
சிம்பு - வெங்கட் பிரபு கூட்டணியில், கடந்த 2018-ம் ஆண்டில் மாநாடு படம் உருவாகிறது என்றும், 2019-ம் ஆண்டின் கோடைவிடுமுறைக்கு படம் திரைக்கு வரும் என்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. ஆனால், படப்பிடிப்பு கூட துவங்காமல் இருந்தது. அதன் பின், 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்கும் என்று மீண்டும் அறிவிப்பு வெளியானது. அதன் பின்னும் படப்பிடிப்பு வேலைகள் துவங்கவில்லை. அதனை தொடர்ந்து நடிகர் சிம்பு நீக்கப்படுவதாக சுரேஷ் காமாட்சி தெரிவித்தார். இதனையடுத்து கடந்த ஆண்டு, மாநாடு படத்தில் நடிக்க தான் தயாராக இருப்பதாகவும், படப்பிடிப்புக்கு சரியாக வந்து ஒத்துழைப்பு அளிப்பதாக நடிகர் சிம்பு தெரிவித்திருந்தார். இதனையடுத்து மாநாடு படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. இந்த படத்தில் நடிகர் சிம்பு முஸ்லீம் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில், இந்தப் படத்தில் நடிகர் விஜய்யின் தந்தையும் பிரபல இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் இணைந்துள்ளார். அதனை தொடர்ந்து, இயக்குநர் பாரதிராஜா, நடிகர் கருணாகரன் ஆகியோரும்  இப்படத்தில் சிம்புவுடன் நடிக்கின்றனர். தொடர்ந்து இப்படம் குறித்த புதிய தகவல்கள் வெளியான வண்ணம் இருப்பதால், சிம்பு ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.