தளபதி சூப்பர் ஸ்டார்.! மாஸ்டர் ஹீரோயின் ஓபன் டாக்.!

மாளவிகா மோகன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தளபதியை குறித்து கூறுகையில், அவருடன்  இந்த படத்தில் பணியாற்றியது  மிகவும் அற்புதமாக இருந்தது என்றும், அவர் தான் மிகவும் எளிமையான தன்மையான சூப்பர் ஸ்டார் என்றும், இப்போது நாங்கள் இருவரும் நண்பர்களாக மாறிவிட்டோம் என்றும் கூறியுள்ளார். 

தளபதி விஜய் தற்போது நடித்து  வெளியாகவிருக்கும் திரைப்படம் மாஸ்டர்.இந்த படத்தை மாநகரம், கைதி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இப்படத்தின் கதாநாயகியாக மாளவிகா மோகன் நடிக்கிறார். மேலும் விஜய் சேதுபதி வில்லனாகவும் , சாந்தனு, ஆண்ட்ரியா, கௌரி கிஷன், தீனா ஆகியோர் முக்கிய  வேடங்களில் நடித்துள்ளனர்.  அனிருத்தின் இசையமைப்பில் வெளியான அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு, இணையதளங்களிலும் பல்வேறு சாதனைகளையும் பெற்று வருகிறது.  அதிலும் வாத்தி கமிங் பாடலுக்கு பல பிரபலங்கள் மாஸ்ஸான நடனமாடி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு உலகளவில் அந்த பாடல் பலரது கவனத்தையும் ஈர்த்து டிரெண்டாகி  வருகிறது ஏப்ரல் மாதத்தில் திரைக்கு வரவிருந்த இந்த படம் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக  படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தற்போது விஜய் ரசிகர்கள் காத்திருக்கும் ஒரே விஷயம் இப்படத்தின் ரிலீஸ் மற்றும் டீசர் தான். சமீபத்தில் தான் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தொடங்கப்பட்டது. விரைவில் டீசர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 



இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் கதாநாயகியான மாளவிகா மோகன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தளபதியை குறித்து கூறுகையில், அவருடன்  இந்த படத்தில் பணியாற்றியது  மிகவும் அற்புதமாக இருந்தது என்றும், அவர் தான் மிகவும் எளிமையான தன்மையான சூப்பர் ஸ்டார் என்றும், இப்போது நாங்கள் இருவரும் நண்பர்களாக மாறிவிட்டோம் என்றும் கூறியுள்ளார்.