ரஜினியின் அரசியல் வருகையை பங்கமாய் கலாய்த்த கோமாளி படக்குழு! என்னனு தெரியுமா?!

ஜெயம் ரவி நடிப்பில் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் கோமாளி. இந்த படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்கி உள்ளார். இதில் காஜல் அகர்வால் ஹீரோயினாக நடித்துள்ளார். யோகிபாபு காமெடி ரோலில் நடித்துள்ளார். ஹிப்ஹாப் ஆதி இசையமைத்துள்ளார்.

இப்பட ட்ரைலர் நேற்று வெளியானது. இதில் ஜெயம் ரவி 15 வருடத்திற்கும் மேலாக கோமாவில் இருந்து 2016இல் முழித்துக்கொள்வதுபோல காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். அப்போது எழுந்த ஜெயம் ரவி, நம்பாமல் டிவி பார்ப்பார் அதில் ரஜினிகாந்த் நான் அரசியலுக்கு வருவது உறுதி என மேடையில் கூறுவார். உடனே ஜெயம் ரவி, ‘ யாரை ஏமாத்த பாக்குறீங்க, இது 1996 என கூறுவார். ‘ ரஜினி 1996 முதல் அரசியலுக்கு வருவது குறித்து பேசி வருவதை நேரடியாக கலாய்த்து உள்ளனர்.

 

 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.