மாலை எடுத்து வந்த தலைமையாசிரியருக்கு ரூ.1,000 அபராதம் விதித்த கலெக்டர்..!

மத்திய பிரதேசத்தில் உள்ள பிந்த் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியராக இருப்பவர் சொட்டி சிங். இம்மாவட்டத்தில் உள்ள 50-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ ,மாணவியர்கள் வனத் துறையினருடன் சேர்ந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.
இந்த விழாவிற்கு மாவட்ட கல்வி அதிகாரி போன்ற அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கலெக்டர் சொட்டி சிங் அழைக்கப்பட்டார். சொட்டி சிங்கை வரவேற்பதற்காக மாலைகள் வாங்கி வந்திருந்தனர். அந்த மாலையை பள்ளி தலைமையாசிரியர் பி.எஸ் சவுகான் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பையில் எடுத்து வந்துள்ளார்.
இதைப் பார்த்த மாவட்ட ஆட்சியர் சொட்டி சிங். இந்த விழா சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பை மற்றும் ஒரு முறை பயன்படுத்தப்படும் குடிநீர் பாட்டில்கள் பயன்படுத்தப் பட்டுள்ளது.
இது தவறு என்பதால் இந்த தவறு முன்னுதாரணமாக ஆகி விடக்கூடாது என்பதற்காக ரூபாய் ஆயிரத்தை தலைமையாசிரியருக்கு அபராதம் விதித்தேன் என கூறினார்.மேலும் அதே இடத்தில் தலைமையாசிரியரிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan