முதல் முறையாக புதிய மதுபான வகைகளை அறிமுகபடுத்த போகும் கோகோ கோலா

உலகில் மிகவும் பிரபல குளிர்பான நிறுவனமான கோகோ கோலா நிறுவனம். இந்த பன்னாட்டு தொழிற்சாலை தன்னுடைய 125 ஆண்டு வரலாற்றில் முதன்முறையாக மதுபான வகையை இந்த வருடம் அறிமுகப்படுத்த உள்ளது.

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த பிரபல குளிர்பான  நிறுவனம், தனது 125 ஆண்டு வரலாற்றில் முதன்முறையாக இந்த வருடம் மதுபான வகைகளை அறிமுகப்படுத்த உள்ளது. சுமார் 3 முதல் 8 சதவிகிதம் வரை ஆல்கஹால் கொண்ட புதிய புதிய மதுபான வகைகளை முதலில் அந்நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது. இந்நிலையில் முதற்கட்டமாக அந்த சேவையை ஜப்பான் நாட்டில் இந்த மதுபான வகைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment