மேட்டூர் அணையில் இருந்து நாளை முதல் 137 நாட்களுக்கு நீர் திறக்க முதல்வர் அதிரடி உத்தரவு!

காவிரி ஆற்றில் நீர் பெருக்கெடுத்து ஓடியதால் மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவை

By manikandan | Published: Aug 27, 2019 02:14 PM

காவிரி ஆற்றில் நீர் பெருக்கெடுத்து ஓடியதால் மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவை எட்டி, மெட்டோர் அணையில் இருந்து டெல்டா மாவட்ட பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்டது. தற்போது, நாளை முதல் 137 நாட்களுக்கு மேட்டூர் அணையில் இருந்து இரண்டு மதகுகள் வழியாக புள்ளம்பாடி, புதிய கட்டளை மேட்டு பகுதி பாசனத்திற்க்காக நீர் திறக்கப்பட வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். திருச்சி, தஞ்சாவூர், அரியலூர் மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையினை ஏற்று, புள்ளம்பாடி, புதிய கட்டளை மேட்டு பகுதி விவசாய நிலங்கள் பயன்படும் வகையில் நீர் திறக்கப்பட உள்ளது. எனவும், இதன் மூலம், 42 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன் பெரும் என தகவல் வெளியாகி உள்ளது.
Step2: Place in ads Display sections

unicc