கோட்டைகொத்தளத்தில் கொடியேற்றிய பின் தமிழக முதல்வரின் முக்கிய அறிவிப்புகள்!

இன்று நம் பாரத நாடு முழுவதும், 73வது சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடியை ஏற்றினார்.

அதேபோல சென்னை கோட்டை கொத்தளத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேசிய கொடியேற்றி மக்களிடையே முக்கிய அறிவிப்புகள் பற்றி உரையாற்றினார். முதலமைச்சராக மூன்றாவது முறையாக கோட்டையில் கொடியேற்றினார் எடப்பாடி பழனிச்சாமி.

அவர் கூறுகையில், ‘ சுதந்திர போராட்ட தியாகிகளின் ஓய்வூதியம் 15 ஆயிரத்தில் இருந்து 16 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி அறிவித்தார். கங்கை ஆறு மறுசீரமைப்பு போல காவேரியை மறு சீரமைப்பு செய்ய நடந்தாய் வாழி காவேரி எனும் திட்டத்தின் கீழ் சுத்தம் செய்யப்படும் எனவும்,

வேலூர் மாவட்டத்தை மூன்றாக பிரித்து வேலூரை தலைநகரமாக வைத்து ஒரு மாவட்டமாகவும், திருப்பத்தூரை தலைநகரமாக வைத்து ஒரு மாவட்டமும், ராணிப்பேட்டையை தலைநகரமாக வைத்து ஒரு மாவட்டம் என மூன்று மாவட்டமாக பிரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின் மிகை மாநிலமாக தற்போது திகழ்வது போல, நீர் மிகை மாநிலமாகவும் விரைவில் மாறும் எனவும் அறிவிக்கப்பட்டது.  மேலும் ஹிந்தி பேசாத மாநிலங்களில் ஹிந்தியை திணிக்க கூடாது எனவும் கூறினார்.

 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.