வெள்ளத்தடுப்பு மையம் அமைக்க ரூ.4445 கோடி தேவை ..! முதலமைச்சர் பழனிசாமி ரதமர் நரேந்திர மோடியிடம்  கோரிக்கை

தமிழகத்துக்கு தேவையான நிதியை வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம்  கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று  முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் தலைநகர் டெல்லிக்கு பிரதமர் நரேந்திர மோடியை புறப்பட்டார் முதலமைச்சர் பழனிசாமி .இந்நிலையில் இன்று  டெல்லியில், பிரதமர் நரேந்திர மோடியை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்தார்.இந்த சந்திப்பு சுமார் 30 நிமிடங்கள் நடைபெற்றது.

இதன் பின்னர் முதலமைச்சர் பழனிசாமி கூறுகையில், தமிழகத்துக்கு தேவையான நிதியை வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம்  கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அண்ணா மற்றும் ஜெயலலிதாவிற்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆரின் பெயர் வைக்க கோரிக்கை வைத்தேன்.அதேபோல் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனையை விரைந்து அமைக்க கோரிக்கை விடுத்துள்ளேன். சென்னை மாநகர நிரந்தர வெள்ளத்தடுப்பு மையம் அமைக்க தேவையான ரூ.4445 கோடி வழங்க வலியுறுத்தியுள்ளேன். ராமநாதபுரத்தில் மருத்துவ கல்லூரி அமைக்க கோரிக்கை வைத்துள்ளேன்.மேலும் காகிதத்தில் கொடுக்கும் புகாருக்கெல்லாம் அமைச்சரவை ராஜினாமா செய்ய வேண்டுமென்றால், இந்தியாவில் அனைவரும் ராஜினாமா செய்ய வேண்டியதுதான் என்றும் மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட அனுமதி அளிக்கக்கூடாது என்று கோரிக்கை விடுத்துள்ளேன். துணை முதலமைச்சர்- தினகரன் சந்திப்பு குறித்து கருத்து தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தேவையான விளக்கம் அளித்துவிட்டார். நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவித்த பின்பே கூட்டணி குறித்து அறிவிக்கப்படும்.தமிழகத்தில் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் தான் தள்ளி வைத்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
 

Leave a Comment