சிசிடிவி ரெக்கார்டர் என நினைத்து செட்டாப் பாக்ஸை களவாண்டு சென்ற புத்திசாலி திருடர்கள்..!

டெல்லி பெகும்பூர் பகுதியில் உள்ள ஒரு நகைக்கடையில் கடந்த சனிக்கிழமை திருட்டு

By surya | Published: Nov 11, 2019 08:07 PM

டெல்லி பெகும்பூர் பகுதியில் உள்ள ஒரு நகைக்கடையில் கடந்த சனிக்கிழமை திருட்டு சம்பவம் அரங்கேறியுள்ளது. இதுகுறித்து கடை உரிமையாளர் டெல்லி காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் விசாரணையை தொடங்கி உள்ள காவல் துறையினர், கடையில் உள்ள சிசிடிவி காட்சிகள் மூலம் ஆய்வு செய்தனர். சிசிடிவி காட்சிகளை வைத்து பார்க்கையில், திருடரின் முகம் மிகத் தெளிவாக பதிவாகியது. இதில், முதலாவதாக வாடிக்கையாளரை போல இரண்டு நபர்கள் வந்தனர். இவர்களை தொடர்ந்து, மேலும் இருவர் கடைக்குள் நுழைந்தனர். உடனே துப்பாக்கியை நீட்டிய அந்த திருடர்கள், கடை உரிமையாளரை துப்பாக்கியை காட்டி மிரட்டி, 25 லட்ச ரூபாய் மதிப்பிலான நகைகள் மற்றும் 1 லட்ச ரூபாய் பணத்தையும் கொள்ளை அடித்தனர். அதன் பின், அவர்கள் கொள்ளை அடித்தது தான்தான் என தெரியாமல் இருப்பதற்காக சிசிடிவி ரெக்கார்டரான டிவிஆர் என நினைத்து செட்டாப் பாக்ஸை கையுடன் ஏடுத்து சென்றனர் என காவல் துறை தெரிவித்தது. இதனையடுத்து, புகாரின் பெயரில், தனிப்படை அமைத்து காவல்துறையினர் திருடர்களை பிடிக்கவுள்ளது. டிவிஆருக்கு பதில், செட்டாப் பாக்ஸை களவாண்டு சென்றதால் திருடர்களை எளிதாக அடையாளம் கண்டுள்ளோம் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
Step2: Place in ads Display sections

unicc