கொரோனா தடுப்பு பணிக்கு 2 கோடி நிதி கொடுத்த சிட்டி யூனியன்.!

கொரோனா தடுப்பு பணிக்கு 2 கோடி நிதி கொடுத்த சிட்டி யூனியன்.!

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்கு  தேவையான மருத்துவ சிகிச்சை மற்றும் ஏழை மக்களுக்கு உதவி செய்ய நிதி தங்களால் இயன்ற உதவியை செய்யலாம் என மத்திய அரசும் , தமிழக அரசும் கூறியுள்ளது. 

இதைத்தொடர்ந்து பலர் தங்களால் இயன்ற உதவியை செய்து வருகிறார்கள். இந்நிலையில் சிட்டி யூனியன் வங்கி நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி நா.காமகோடி வெளியிட்ட அறிக்கையில்  கொரோனா வைரசை தடுக்க மத்திய அரசும் , அந்தந்த மாநில அரசுகளும் போர்க்கால அடிப்படையில் சுகாதார நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இதையெடுத்து கொரோனா தடுப்பு பணிக்கு கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் சிட்டி யூனியன் வங்கி , பிரதமரின் நிவாரண நிதிக்கு 1 கோடி யும் , தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 1 கோடி வழங்கி உள்ளது.

வழங்கப்பட்ட இந்த 2 கோடி  நிதியானது சிட்டி யூனியன் வங்கியும், வங்கி இயக்குநர்கள், நிர்வாகிகள், ஊழியர்கள்என  அனைவரும் இணைந்து 2 கோடி வழங்கியுள்ளனர் என்று அறிக்கையில் கூறியுள்ளார்.

author avatar
murugan
Join our channel google news Youtube