அரசியலமைப்பு வரலாற்றில் கருப்பு நாள்..!!! சோனியா கொதிப்பு..!

  • இந்திய அரசியலமைப்பு வரலாற்றில் கருப்பு நாள் என்று  குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதா குறித்து சோனியா காந்தி விமர்சனம்.
  • மத வெறி சக்திகளுக்கு கிடைத்த வெற்றி என்று சாடியுள்ளார்.

மக்களவையைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதா நிறைவேறியது.இந்த குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவிற்கு ஆதரவாக 125  வாக்குகளும், எதிராக 105 பேர் வாக்களித்தனர்.பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் மாநிலங்களவையில் நிறைவேறியது.இதில் சிவசேனா வெளிநடப்பு செய்தது.

இந்நிலையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை மசோதா ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பப்படும்.காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்புகளுக்கு இடையே மசோதா நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது.மேலும் குடியரசுத் தலைவர் மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தவுடன் சட்டமாக நடைமுறைப்படுத்தப்படும்.

இந்த மசோதா குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறுகையில் இந்திய அரசியலமைப்பு வரலாற்றில் கருப்பு நாள்.மேலும் இது குறுகிய எண்ணம்  மற்றும் மத வெறி சக்திகளுக்கு கிடைத்த வெற்றி என்று கடுமையாக விமர்சித்து உள்ளார்.

 

author avatar
kavitha