குடியுரிமைத் திருத்தச் சட்டம் ..! திமுக சார்பில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்

  • குடியுரிமை  திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. 
  • குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்து ஆலோசிப்பதற்காக இன்று  திமுக சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது. 

கடந்த 1955-ஆம் ஆண்டு இந்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்து,பாகிஸ்தான்,வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத அடிப்படையிலான துன்புறுத்தல்களால் வெளியேறி,இந்தியாவில் தஞ்சமைடைந்த முஸ்லிம்கள் அல்லாத பிற சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் மத்திய அரசு குடியுரிமை திருத்த மசோதாவை கொண்டுவந்தது.இந்த சட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றம் செய்யப்பட்ட நிலையில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தும் ஒப்புதல் அளித்துவிட்டார்.சட்டமும் அமலுக்கு வந்துவிட்டது. இந்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்து ஆலோசிப்பதற்காக திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி ஆலோசனை கூட்டம் அண்ணா அறிவாலயத்தில்  ஜனவரி 24-ஆம் தேதி (இன்று  ) காலை 10 மணிக்கு கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டம் நடத்துவது எந்த வகையில் என்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.