இலவச சரக்கு கேட்ட குடிமகன்கள்.! தர மறுத்ததால் டாஸ்மார்க் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு.!

தனியார் மதுபானக் கடையில் மது வாங்கிவிட்டு பணம் கொடுக்காமல் மறுத்த

By balakaliyamoorthy | Published: Dec 17, 2019 11:54 AM

  • தனியார் மதுபானக் கடையில் மது வாங்கிவிட்டு பணம் கொடுக்காமல் மறுத்த மூன்று மர்ம நபர்.
  • புதுச்சேரியில் மதுபான கடையில் நாட்டு வெடிகுண்டுகள் வீசிய 3 ரௌடிகள், சிசிடிவி காட்சிகளின் மூலம் கைது செய்யப்பட்டனர்.
புதுச்சேரி திருபுவனை, திருவண்டார்கோயில் கொத்தபுரிநத்தத்தில் தனியார் மதுபான கடை பார் வசதியுடன் அமைந்துள்ளது. ஞாயிற்றுகிழமை இரவு 3 பேர் மதுக்கடைக்கு வந்து பல்வேறு பிராண்ட் சரக்குகளை வாங்கி அருந்தினர். இறுதியில் பணம் தராமலேயே கடையைவிட்டு கிளம்ப முயற்சித்தனர். அவர்களிடம் பணம் கேட்ட போது தர மறுக்கவே, கடையின் காசாளரும் கல்லாவைவிட்டு இறங்கிச் சென்று பணம் கேட்டுள்ளார். அப்போதும் நாங்கள் மிகப்பெரிய ரவுடிகள் எனக் கூறிக் காசாளரை மிரட்டி தங்களுக்கு மேலும் சரக்குகள், பணமும் தர கேட்டு மிரட்டத் தொடங்கினர். இதற்கு காசாளரும், ஊழியர்களும் கொடுக்க மறுத்தனர். இந்நிலையில், அந்த மூன்று பேரும் அவர்கள் கொண்டு வந்திருந்த நாட்டு வெடிகுண்டுகளை அந்த பாரின் மீது வீசினர். இதனால் அங்குள்ள மதுபாட்டில்கள் உடைந்தன. இதன்காரணமாக அக்கடையில் மது அருந்தி கொண்டிருந்தவர்கள் பயந்து ஓடினர். பின்னர் இந்த வெடிகுண்டு வீச்சில் ஊழியர்கள் இரண்டுபேருக்கு சிறிய அளவில் காயமும் ஏற்பட்டது. பின்னர் இதுகுறித்து காசாளர் பாஸ்கர் திருபுவனை போலீஸில் புகார் கொடுத்தார். மேலும் அங்குள்ள சிசிடிவியில் பதிவான காட்சிகளை கொண்டு ரவுடிகளை விசாரணை நடத்திய போலீசார், சன்னியாசிக்குப்பம் பேட் பகுதி சேர்ந்த விக்னேஷ், கதிர், முகேஷ் ஆகியோரை பிடித்து அவர்களிடம் இருந்து ஆயுதங்களையும் கைப்பற்றியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
Step2: Place in ads Display sections

unicc