இந்தியாவில் தயராகும் ‘பேட்மே’ன் – ‘சூப்பர்மேன்’ பட இயக்குனரின் அடுத்த படம்!

பேட்மேன் தி டார்க் நைட், பேட்மேன் பிகின்ஸ், த டார்க் நைட் ரைசஸ், பேட்மேன் VS சூப்பர்மேன் போன்ற படங்களை இயக்கிய ஹாலிவுட் முன்னணி இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் அடுத்ததாக இந்தியாவில் ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார்.

இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான டன்க்ரிக் திரைப்படம் ஆஸ்கர் விருதுகளை பெற்றது. இவர் தற்போது மும்பையில் ஷூட்டிங் ஸ்பாட்களைத் தேடி தற்போது ஷூட்டிங் செய்வதற்கான வேலைகளில் மும்முரமாக தயாராகி விட்டார்.

இந்தியாவில் தயாராகும் இந்த படத்திற்கு டெனென்ட் என தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்திற்காக மும்பை தாஜ் ஹோட்டலில் முக்கிய காட்சி எடுக்கப்படவுள்ளது. மேலும் பாலிவுட் நடிகை ஒருவரும் இப்படத்தில் நடிக்க உள்ளார். 2020 டெனென்ட் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.