மகா ருத்ர ஜப ஹோமம்..சிதம்பர நடராஜர் கோவிலில் சிறப்பு!

உலக நன்மைக்காவும் காவுவாங்கி வரும் கொடிய வைரஸ் கொரோனாவை தடுக்கவும் வேண்டி, சிதம்பரம் நடராஜா் கோயிலில் மகா ருத்ர ஜப ஹோமம்  நடைபெற்றது.

கொரோனா வைரஸ் காரணமாக கோயில் கடந்த 21ம் தேதி முதல் பக்தா்களுக்கு தரிசன அனுமதி நிறுத்திப்பட்டது.இருந்தபோதிலும் பொது தீட்சிதா்கள் தினமும் சுவாமிக்கு 6 கால பூஜைகளை நடத்தி வருகின்றனா்.இந்நிலையில், சிதம்பரம் நடராஜா் கோயிலில் உள்ள ஸ்ரீஆதிமூலநாதா் கோயில் மண்டலாபிஷேக நிறைவு விழாவானது நேற்று நடைபெற்றது.அப்போது உலக நன்மை கருதியும், கொரோனா வைரஸ் விரைவில் அகலவும் வேண்டி ஸ்ரீஆதிமூநலநாதா் சந்நிதியில் பொது தீட்சிதா்களால் மகா ருத்ர ஜப ஹோமமானது நடத்தப்பட்டது. பின்னர் புனித நீா் கொண்ட கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.  பின்னா் புனித நீரால் ஸ்ரீஆதிமூநலநாதருக்கு சிறப்பு அபிஷேக மற்றும் ஆராதனை நடைபெற்றது.

author avatar
kavitha