நாமக்கல் தொகுதியில் கொமதேக வேட்பாளராக சின்ராஜ் போட்டி!!உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார்!!

  • மக்களவை தேர்தல்  தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.
  • நாமக்கல் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் ஏ.கே.பி.சின்ராஜ் போட்டியிடுகிறார்.

இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.மக்களவை தேர்தல்  தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில் மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில்  காங்கிரஸ்  -10, மதிமுக – 1 மக்களவை, 1 மாநிலங்களவை, விசிக – 2, மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட்  – 2, இந்திய கம்யூனிஸ்ட்  – 2, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் – 1, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி -1, ஐஜேகே – 1 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் திமுக 20 தொகுதிகளில் போட்டியிடும் என்று தெரிவிக்கப்பட்டது.

திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்த விபரம்  வெளியானது.  மக்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.அதேபோல் மதிமுக,விசிக, மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் , இந்திய கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் ஐஜேகே  ஆகிய கட்சிகள் வேட்பாளரை அறிவித்துள்ளனர்.

இந்நிலையில்  நாமக்கல் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் ஏ.கே.பி.சின்ராஜ் போட்டியிடுகிறார்.இது தொடர்பாக ஈரோட்டில் நடைபெற்ற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின்  கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

Leave a Comment