ரயில்களுக்குப் பின்னால் ஓடி பயணிகளின் உயிர்களை காக்கும் ‘சின்னப்பொண்ணு’நாய்..!

பொதுவாக பலர் தங்களது வீடுகளில் நாய்களை வளர்ப்பது வழக்கம். சிலர் குழந்தையின்மையை மறக்கவும், சிலர் குழந்தைகளுடன் விளையாடுவது போல அவைகளுடன் விளையாடவும், பலர் வீட்டை பாதுகாக்கவும், சிலர் அழகுக்காகவும், மரியாதையாகவும் என பல எண்ணங்களில் நாய்களை வளர்க்கிறார்கள்.
அப்படி வளர்க்கும் அந்த நாய்களுக்கு பெயர் வைத்து வீட்டிலேயே வைத்திருக்கிறார்கள். அந்த நாய்கள் நமக்கு நன்றியோடு இருப்பதும் நன்மை செய்வதும் வழக்கம். ஆனால், சென்னையில் ஒரு வித்தியாசமான நாய் இருக்கிறதாம். அதன் பெயர் சின்னப்பொண்ணு. இதற்கு பெயர் மட்டும் வித்தியாசம் அல்ல, குணமும் தான்.
அதாவது ரயிலில் பயணம் செய்யும் இளஞர்கள் வாசல்களில் தொங்கியபடி பயணம் செய்தால், நடை மேடைகளில் படுத்திருக்கும் இந்த சின்ன பொண்ணு நாய் அவர்களை துரத்தி சென்று, எச்சரிக்குமாம். அவர்களும் அதை கண்டவுடன் உள்ளே சென்று விடுவார்களாம். கேட்கவே ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா? ஆம், அது மட்டும் அல்ல போலீசாருடன் ரோந்து கூட செல்லுமாம் இந்த சின்ன பொண்ணு. இவ்வாறு பலரின் உயிரை காக்கிறது இந்த ரயில் நிலைய வாசி சின்ன பொண்ணு நாய்.

author avatar
Rebekal