23.7 C
Chennai
Friday, November 27, 2020

சீன பெண்ணுக்கு நேர்ந்த சிறிய சாலை விபத்து – CT ஸ்கேன் பார்த்து அதிர்ந்த பெண்!

- Advertisement -
- Advertisement -

சிறிய விபத்துக்கு பிறகு சிடி ஸ்கேன் செய்து பார்த்து தனது குழந்தை பருவத்தில் மண்டை ஓட்டிற்குள் நுழைந்துள்ள ஊசியைப் பார்த்து அதிர்ந்த சீனப்பெண்.

சீனாவை சேர்ந்த ஹெனன் எனும் மாகாணத்தில் வசிக்கக்கூடிய ஜூ எனும் பெண் தற்பொழுது 29 வயதுடைய இளம் பெண். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக வாகனத்தில் செல்லும் போது சிறிய விபத்தில் மாட்டி உள்ளார், ஆனால் விபத்தின் போது எந்த ஒரு காயமும் இல்லை. தலையில் லேசான வலி இருந்ததால் உள்காயங்கள் ஏதேனும் இருக்கிறதா என சிடி ஸ்கேன் செய்து பார்ப்பதற்காக மருத்துவமனையை அணுகியுள்ளார். அப்பொழுது தலையை சிடி ஸ்கேன் எடுத்துப் பார்த்தபோது அவளது மூளைக்குள் 5 சென்டி மீட்டர் நீளமுடைய இரண்டு ஊசிகள் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த விபத்தின் போது அவருக்கு இந்த ஊசிகள் நுழையவில்லை அதுவும் இல்லாமல் நுழைந்ததற்கு தளும்பும் எதுவுமே இல்லை, அப்படி இருக்கும் பொழுது இது எப்படி நடந்தது என்று ஆராய்ந்துள்ளனர்.

இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில் ,இது ஒரு சிறு வயதில் மண்டை ஓடு கடினம் ஆவதற்கு முன்பாக வைக்கப்பட்டுள்ளன அதனால் தான் அவருக்கும் இது எப்பொழுது நுழைக்கப்பட்டது என்பது குறித்து விவரம் தெரியவில்லை என நினைக்கிறோம் என கூறியுள்ளனர். ஆனால் இதில் ஆச்சரியம் என்னவென்றால் இத்தனை காலங்கள் இந்த ஊசி வலி தரவில்லை என்பதற்கு கரணம் அது மண்டை ஓட்டில் எந்த ஒரு நரம்பு பகுதிகளையோ, முக்கியமான செயல்பாடு உள்ள பகுதிகளிலேயே அது இல்லை.

எனவேதான் அவர் ஒருபோதும் இது குறித்த வலியை உணராமல் இருந்துள்ளார். இந்நிலையில் இவர் தத்தெடுக்கப்பட்ட குழந்தை என அவரது வளர்ப்பு பெற்றோர்கள் மருத்துவர்களிடம் கூறியுள்ளனர். மேலும், இதுகுறித்து விசாரித்த பொழுது ஜு தங்களது வீட்டுக்கு வருகையில் அவரது மண்டையில் இரண்டு கரும்புள்ளிகள் இருந்ததாக கூறி உள்ளார். இந்நிலையில் ஜூவின் தலையில் சிறு வயதில் யாரும் வேண்டும் என்றே பகை காரணமாக நுழைத்தார்களா? அல்லது தானாக ஏதும் நடந்துள்ளதா என்பது கற்பனை செய்து பார்க்க முடியாத ஒன்று. ஆனால் இது தற்பொழுது நுழைந்தது அல்ல என மருத்துவர்கள் கூறுகின்றனர். இதை அகற்றுவதற்கான வழிமுறைகளை மருத்துவர்கள் தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.

- Advertisement -

Latest news

சிறந்த மாநிலங்கள் பட்டியலில் தொடர்ந்து 3-வது முறையாக முதலிடத்தை தக்கவைத்த தமிழகம்!

இந்தியா டுடே சார்பில் வெளியிடப்பட்டுள்ள, சிறந்த மாநிலங்களின் பட்டியலில், தொடர்ந்து 3-வது முறையாக முதலிடத்தை தக்க வைத்துள்ளது தமிழகம்.  சிறந்த மாநிலங்களின் பட்டியலை, இந்தியா டுடே வெளியிட்டுள்ளது. அதில், அகில இந்திய அளவில் தமிழகம்...
- Advertisement -

#BREAKING: அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் – வானிலை ஆய்வு மையம்

வங்க‌க் கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு ...

பாலா மீது நீங்க வைச்சிருக்கிறது அன்பா?காதலா.?

கால் சென்டர் டாஸ்க்கில் ஆரி ஷிவானியிடம் பாலா மீது நீங்க வைச்சிருக்கிறது அன்பா?காதலா என்ற கேள்வியை எழுப்புகிறார் . தமிழ் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி இன்று 54 ஆவது நாளாக வெற்றிகரமாக...

கொரோனாவுக்கும் பயம், பேரக்குழந்தை மீதும் பாசம் – இணையத்தை கலக்கும் புகைப்படம்!

கொரோனாவால் தங்கள் பேரக்குழந்தைகளை கண்ணாடி வழியாக பார்க்கும் தாத்தா-பட்டி மற்றும் அவர்களின் நாய் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.  கொரோனா வைரஸ் தொற்று தங்களுக்கு வந்தவர்களிடம் கூட இல்லாத அச்சம் வராதவர்களிடம் முன்னெச்சரிக்கையாகவே இருக்கிறது....

Related news