சாலை மார்க்கமாக மாமல்லபுரம் செல்லும் சீன அதிபர் ஷி ஜின்பிங்..!

பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்த சீன அதிபர் ஷி ஜின்பிங் இன்று சென்னை வந்தார். விமான நிலையத்தில் சீன அதிபர் ஷி ஜின்பிங் அவருக்கு மேளதாள , கலை நிகழ்ச்சிகள் மூலம் வரவேற்பு கொடுக்கப்பட்டது.
பின்னர் அவருக்கென ஏற்பாடு செய்யப்பட்ட சொகுசு காரில் கிண்டி கிராண்ட் ஹோட்டலுக்கு சென்றார். ஹோட்டலில்  சில மணி நேரம் ஓய்வு எடுத்த பிறகு ஷி ஜின்பிங் தற்போது மாமல்லபுரம் புறப்பட்டுள்ளார்.
சோழா ஹோட்டலில் இருந்து மாமல்லபுரம் சாலை வழியாக பலத்த பாதுகாப்புடன் சீன அதிபர் ஷி ஜின்பிங் செல்கிறார். சாலைகளின் இருபுறங்களிலும் தடுப்பு அமைக்கப்பட்டு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

author avatar
murugan