சீன அதிபர் ஜின்பிங்-பிரதமர் மோடி சந்திப்பு ! மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு தடை

சீன அதிபர் ஜின்பிங்கும்-இந்திய பிரதமர் நரேந்திர மோடியும்  மாமல்லபுரத்தில்

By venu | Published: Oct 08, 2019 02:07 PM

சீன அதிபர் ஜின்பிங்கும்-இந்திய பிரதமர் நரேந்திர மோடியும்  மாமல்லபுரத்தில் சந்திக்க உள்ள நிலையில் அங்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள மாமல்லபுரத்தில் அக்டோபர் 11-ஆம் தேதி  சீன அதிபர் ஜின்பிங்கும்-இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.இரு தலைவர்களும் மாமல்லபுரத்தில் உள்ள புராதனச் சின்னங்களை சுற்றிப் பார்க்க உள்ளனர் .இதனையடுத்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இதனால் மாமல்லபுரம்  சுற்றுவட்டார பகுதிகளில்  பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.அந்த வகையில், மாமல்லபுரத்தில் உள்ள சுற்றுலா தளங்களுக்கு வருவதற்கு,வருகிற 13ம் தேதி வரை சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.மேலும் ஹெலிகேம்கள் எனப்படும் ட்ரோன் கேமராக்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Step2: Place in ads Display sections

unicc