#2019 RECAP:மாமல்லபுரத்தில் சந்தித்த சீன அதிபர் ஜின்பிங்- பிரதமர் மோடி.!

#2019 RECAP:மாமல்லபுரத்தில் சந்தித்த சீன அதிபர் ஜின்பிங்- பிரதமர் மோடி.!

  • கடந்த அக்டோபர் 11 , 12 தேதிகளில் சீன அதிபர் ஜின்பிங் இந்திய பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் சந்தித்து கொண்டனர்.
  • வெண்ணெய் உருண்டை பாறை முன் இருவரும் கைகளை கோர்த்து உயர்த்தி ஒற்றுமையை வெளிப்படுத்தினர்.

கடந்த அக்டோபர் 11 , 12 தேதிகளில் சீன அதிபர் ஜின்பிங் இந்திய பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் சந்தித்து கொண்டனர். கடந்த அக்டோபர் 11 தேதி சென்னை வந்த சீன அதிபர் ஜின்பிங் அவருக்கு மேளதாள , கலை நிகழ்ச்சிகள் மூலம் வரவேற்பு கொடுக்கப்பட்டது.

பின்னர் கிண்டி கிராண்ட் ஹோட்டலில் தங்கி இருந்தார். பிரதமர் மோடி கோவளத்தில் தங்கி இருந்தார். கடந்த அக்டோபர் 11-ம் தேதி மாலை இருவரின் சந்திப்பின் போது பிரதமர் மோடி தமிழக பரமபரிய முறை படி வேஷ்டி சட்டை அணிந்திருந்தார்.

மாமல்லபுரத்தில் சீன அதிபர் ஷி ஜின்பிங்கை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார். பின்னர் இருவரும் மாமல்லபுரத்தில் உள்ள சிற்பங்களை சுற்றி பார்த்தனர். அப்போது பிரதமர் மோடி சீன அதிபருக்கு மாமல்லபுரத்தில் உள்ள  சிற்பங்கள் குறித்து விளக்கினார்.

அப்போது மாமல்லபுரத்தில் வெண்ணெய் உருண்டை பாறை முன் மோடி மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் இருவரும் கைகளை கோர்த்து உயர்த்தி ஒற்றுமையை வெளிப்படுத்தினர். பின்னர்  கடந்த அக்டோபர் 12-ம் தேதி பிரதமர் மோடியை 2-வது நாளாக சந்திக்க சீன அதிபர் ஷி ஜின்பிங் கோவளம் புறப்பட்டு சென்றார்.

 

 

author avatar
murugan
Join our channel google news Youtube